சென்னை டெஸ்ட் : 6 விக்கெட்டை வீழ்த்தியதும் அஷ்வினுக்கு கிடைத்த இந்த மரியாதையை கவனிச்சீங்களா ?

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ishanth 1

- Advertisement -

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்துள்ளது.

மேலும் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக வீசிய அஸ்வின் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் இன்னிங்சிலும் 3 விக்கெட்டை வீழ்த்தி உள்ளதால் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Ashwin

ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஒதுக்கப்பட்டு வந்தாலும் டெஸ்ட் அணியில் சீனியர் வீரராக விளையாடி வரும் அஸ்வின் பல சாதனைகளை படைத்து வருகிறார். அந்த வகையில் இன்றைய போட்டியில் எடுத்த 6 விக்கெட் மூலம் 28 இன்னிங்ஸ்களில் இதுவரை 5 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் 6 விக்கெட் வீழ்த்தி 2-வது இன்னிங்சை முடித்து பெவிலியன் திரும்பிய இந்திய அணியை முன்னின்று வழி நடத்திச் சென்றார். அவருக்கு இந்திய அணி இந்த மரியாதையை வழங்கியது.

ashwin 2

ஏனெனில் எந்தவொரு இன்னிங்சின் போதும் எந்த வீரர் 5க்கும் மேற்பட்ட விக்கெட் எடுத்து அணியை சிறப்பாக கொண்டு சென்றாலும் அவரை முன் நடத்தியே வீரர்கள் பின்னால் பெவிலியனுக்கு சொல்வார்கள். அந்த வகையில் இன்றைய போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக அஸ்வினுக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டது. அஷ்வின் பெவிலியனை நோக்கி செல்ல வீரர்கள் பின்னால் கைதட்டியவாறு சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement