அஸ்வின் தான் அடுத்த தோனி..! கேப்டன்சியில் தோனியின் நிழல்..! அஸ்வினை புகழும் அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

Ashwin
- Advertisement -

நடந்து வரும் ஐபில் போட்டியில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடிவருகிறது. அந்த அணியின் கேப்டனாக இருக்கும் அஸ்வினும் அணியை சிறப்பாக வலை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு வரை சென்னை அணியின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்த அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதோடு அந்த அணியின் கேப்டன் பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது.

finch

- Advertisement -

மேலும் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 3 வைத்து இடத்தில உள்ளது பஞ்சாப் அணி. மேலும் கடந்த ஞாயிற்று கிழமை இண்டோர் மைதானத்தில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20வர்கள் முடிவில் 152 ரன்களை எடுத்தது. மேலும் அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் 51 ரன்களை எடுத்துள்ளார். மேலும் பஞ்சாப் அணியில் முஜீப் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 54 பந்துகளில் 84 ரன்களை விலாசினார். இதனால் பஞ்சாப் அணி 18.4 ஒவரில் இலக்கை எட்டி தனது வெற்றியை புள்ளி பட்டியலில் கூட்டியது.மேலும் இந்த வெற்றிக்கு பேசிய ஆஸ்திரேலிய வீரரும், தற்போதைய பஞ்சாப் அணி வீரருமான ஆரோன் பிஞ்ச் கூறுகையில் “கேப்டன் பதவியில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். இக்கட்டான நேரங்களில் கூட அவர் மிகவும் பொறுமையாக தான் கையாளுகிறார்.

dhoni

இந்த குணத்தை அவர் கண்டிப்பாக அவரது முன்னாள் கேப்டன் தோனியிடம் இருந்த தான் அவர் கண்டிப்பாக கற்றிருக்க வேண்டும். மேலும் அவரது தலைமையில் விளையாடுவது எனக்கு மிகவும்பெருமையாக இருக்கிறது. அவர் அணியை ஊக்குவிப்பதில், வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வத்திலும் தோனி போன்றே செயல்படுகிறார் ” என்று கூறியுள்ளார்

Advertisement