இவருக்கா பேட்டிங் தெரியாதுன்னு சொல்லறீங்க ? என்ன பண்ணி இருக்காரு பாருங்க – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கெதிராக நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ்க் பிறகு இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படவில்லை.

Ashwin 1

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் அஷ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நடந்து வரும் உள்ளூர் போட்டி ஒன்றில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அஸ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியவர். பேட்டிங்கில் 0 மற்றும் 4 ரன் மட்டுமே எடுத்து இருந்தார்.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் தனது பேட்டிங் பார்மிற்கு திரும்ப தமிழகத்தில் நடைபெறும் முதல் டிவிஷன் லீக் போட்டியில் கலந்துகொண்டார். ஆழ்வார்பேட்டை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எம்ஆர்சி அணிக்காக களம் இறங்கினார் அஸ்வின்.

Ashwin

இந்த போட்டியில் 180 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இவரது அணி 346 ரன்கள் குவித்தது. அஸ்வின் ஒரு நல்ல பேட்ஸ்மேன் தான். பலமுறை அவரது ஷாட்கள் விவிஎஸ் லட்சுமணன் போல உள்ளது என்று வர்ணனை செய்ய கேட்டிருக்கிறோம்.

- Advertisement -

தற்போது வரை 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் 1816 ரன்களை குவித்துள்ளார் . இதில் 4 சதங்கள் மற்றும் 10 அரை சதங்களும் அடங்கும். அந்த 4 சதங்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டாலும் முக்கியமான நேரத்தில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Ashwin 1

அஷ்வின் தனது சிறுவயதில் பேட்ஸ்மேனாகவே கிரிக்கெட்டை துவங்கினார். பிறகு தனது பயிற்சியாளர் கூறியதன் மூலம் பந்துவீச்சாளராக மாறினார். நியூசிலாந்து மண்ணில் ரன்களை குவிக்க முடியவில்லை என்ற கவலையில்லை இந்த போட்டியின் மூலம் ரசிகர்கள் போக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement