அகர்வால் மட்டுமல்ல தமிழக வீரர் அஷ்வினும் டியூட்டிக்கு கிளம்பிட்டாராம் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தற்போது இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

Ashwin 1

- Advertisement -

இந்த தொடர் வரும் நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அட்டவணை வெளியாகி இருந்தாலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதனால் தற்போது விஜய் ஹஸ்ரே கோப்பை தொடருக்கான தமிழக அணியில் இணைந்துள்ளார்.

ashwin 1

விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே அகர்வால் தென்னாப்பிரிக்க தொடர்முடிந்து கர்நாடக அணியில் இணைய தற்போது அஷ்வின் தமிழக அணியில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement