முரளிதரனின் இமாலய சாதனைக்கு குறி வைத்து நாளை முறியடிக்கவுள்ள அஸ்வின் – சாதனை விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

Ashwin

- Advertisement -

முதல் இன்னிங்சில் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின் மேலும் 27 வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சாதனை யாதெனில் டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முரளிதரன் தான் முதலிடத்தில் உள்ளார்.

ashwin 1

முரளிதரன் 66 போட்டிகளில் 350 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஸ்வின் தற்போது 66 போட்டிகளில் விளையாடி 349 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுவரை இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் அவர் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முரளிதரனின் இந்த சாதனையை அவர் சமன் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement