கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சாதனையுடன் இணையவுள்ள தமிழக வீரர் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தற்போது இந்தூரில் நடந்து வருகிறது. இன்று துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

Ashwin

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்டில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஒரு சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை இன்று அஸ்வின் படைக்க உள்ளார்.

இதுவரை இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 249 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் மேலும் ஒரு விக்கெட்டை இந்த போட்டியில் வீழ்த்தும் பட்சத்தில் இந்தியாவில் நடந்த டெஸ்டில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார். இதற்கு முன்னதாக அணில் கும்ப்ளே(350) மற்றும் ஹர்பஜன் (265) ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Ashwin 1

மேலும் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் என்ற பட்டியலில் அணில் கும்ப்ளே 619, கபில்தேவ் 434 மற்றும் ஹர்பஜன்சிங் 417 ஆகியோருக்கு பின் அஸ்வின் 357 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement