5 ஆம் நாளில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இதனை செய்ய வேண்டும் – அஷ்வின் கருத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நான்கு நாட்கள் முடிவடைந்த நிலையில் நாளை போட்டி 5 ஆவது நாளுக்கு நகர்ந்து முக்கிய கட்டத்தை எட்ட உள்ளது. நான்கு நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணி கடைசி இன்னிங்சில் 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.

Gill

இதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 4-ஆம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை குவித்துள்ளது. ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் களத்தில் இருக்க இந்திய அணிக்கு கடைசி நாளில் 309 ரன்கள் தேவைப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் 309 ரன்கள் எடுப்பது கடினம் என்றாலும் அதனை எட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

இருப்பினும் போட்டி டிராவில் முடிவடைந்தாலே மகிழ்ச்சியான விஷயம்தான். இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால் நாளைய போட்டியில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pujara 1

நாளைய போட்டியின் போது முதல் செசனில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவது முக்கியமானது. ஏனெனில் முதல் செசனில் விக்கெட்டை இழக்கக் கூடாது. அப்படி பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் பொழுதுதான் எதிரணிக்கு அழுத்தம் ஏற்படும். மேலும் தற்போது களத்தில் இருக்கும் இரு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் எவ்வளவு முக்கியம் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்.

- Advertisement -

Pujara

அந்த வகையில் ரஹானே ஏற்கனவே செஞ்சுரி அடித்தவர். அதுமட்டுமின்றி புஜாராவும் அரை சதத்தை அடித்தவர். எனவே அவர்கள் இருவரும் நாளை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என நம்புகிறோம் என்று அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.