பந்துவீசும் முன்னர் பேட்ஸ்மேன் கிரீஸை தாண்டினால் இதை செய்யுங்கள் – புதிய ஐடியா கொடுத்த அஷ்வின்

Ashwin-1

இந்திய டெஸ்ட் அணியின் மிகமுக்கிய பந்துவீச்சாளராக இருந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். கடந்த சில வருடங்களாக சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாக தனது பெயரில் சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் செய்வதற்கு எல்லாம் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்றால் மிகையாகாது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பந்துவீசி கொண்டிருந்தபோது நான்-ஸ்டிரைக்கர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் பந்து வீசுவதற்கு முன்னதாகவே கிரீசை விட்டு வெளியே சென்றார். உடனடியாக மான்கட் செய்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அப்போது பெரிதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் அந்த தருணத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த விக்கெட் விழுந்த உடன் ராஜஸ்தான் தோற்றுவிட்டது. இருந்தாலும் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அஸ்வின் இது விதிமுறைக்கு உட்பட்ட ஒன்று. இதை மாற்றுங்கள். இல்லை என்றால் இதனை தொடர்ந்து செய்து கொண்டே தான் இருப்பேன் என்று தடாலடியாக பேசினார் .

Ashwin

இந்நிலையில், மீண்டும் அந்த விதியை மாற்றுமாறு குரல் கொடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் கூறுகையில் ..

- Advertisement -

பந்துவீச்சாளர்களை எப்படி கிரீசை தாண்டினால் நோபால் என்று அறிவிக்கப்படுகிறதோ, அதுபோல் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு விதியைக் கொண்டு வரவேண்டும். பந்துவீச படுவதற்கு முன்னர் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறி ரன் எடுக்க ஓடினால் அதனை கண்டறிந்து அந்த பந்தில் அடிக்கப்பட்ட ரன்னை சேர்க்கக் கூடாது அல்லது பந்து வீச்சுக்கு சாதகமாக இது ‘இலவச பந்து’ என்று அறிவிக்க வேண்டும்.

Ashwin

இப்படி செய்வதன் மூலம் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு மிடையே உள்ள ஏற்றத் தாழ்வினை சமன் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.