என்னது நான் “ஆல்டைம் கிரேட்” இல்லையா ? சஞ்சய் மஞ்சரேக்கருக்கு நோஸ் கட் கொடுத்த அஷ்வின் – வைரலாகும் பதிவு

Sanjay

தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் உலகிலேயே மிகச் சிறந்த ஸ்பின்னராக விளங்கும் இந்திய அணியின் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினை, ஆல் டைம் பெஸ்ட் வீரர் என்று மற்றவர்கள் சொல்வதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன் என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் சர்ச்சையைக் கிளப்பினார், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அதுமட்டுமில்லாமல் அஷ்வின் இந்திய ஆடுகளங்களில் மட்டேமே சிறப்பாக பந்து வீசக்கூடியவர் என்றும் வெளிநாட்டு ஆடுகளங்களில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றும் அவர் கூறிய கருத்திற்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான லஷ்மிபதி பாலாஜி போன்றோர் தங்களது கடுமையான விமர்ச்சனங்கள் மூலமாக பதிலடி தந்தனர்.

Sanjay

மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளினால் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே தனது நக்கலான பதிவுகளின் மூலமாக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் ரவிச்சந்திரன் அஷ்வின், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்திற்கும் தன்னுடைய நக்கலான ஸ்டைலில் ஒரு மீமை பதிலாக அளித்துள்ளார்.

- Advertisement -

அந்நியன் படத்தில் விக்ரம், விவேக்கிடம் சொல்லும் வசனமான அப்படி சொல்லாதடா சாரி எனக்கு மனசு வலிக்குது என்று கூறும் மீமை மஞ்ச்ரேக்கருக்கு பதிலாக அளித்த அஷ்வின், அந்த பதிவின்மேல் கண்ணீர் விட்டு சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டும் அவரை வெறுப்பேற்றி உள்ளார். அஷ்வினின் இந்த பதிலானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைராலாக மாறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியிலில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

Ashwin

இந்த போட்டியில் அவர் மேலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்றால், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியிலில் முதலிடத்திற்கும் முன்னேறிச் சென்று விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement