114 வருட கிரிக்கெட்டில் இதுவே முதல்முறை. அஷ்வின் நிகழ்த்திய நூற்றாண்டு அற்புத சாதனை – ரசிகர்கள் வாழ்த்து

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ishanth 1

- Advertisement -

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்துள்ளது.

மேலும் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் பரன்ஸை முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார்.

ashwin 2

இது போன்ற நிகழ்வு 117 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதன் பின்னர் தற்போது 117 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ஸ்பின்னர் ஒரு விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறை இந்த அரியவகை சாதனையை அஷ்வின் படைத்துள்ளார்.

ashwin 1

அவரின் இந்த சாதனைக்காக அவர் ரசிகர்களால் பாராட்டு பெற்று வருகிறார். மேலும் முதல் இன்னிங்சில் அவ்வளவாக பந்துவீச்சில் எடுபடாத சேப்பாக்கம் மைதானம் இரண்டாவது இன்னிங்சில் கை கொடுத்தது. இந்த போட்டியில் அபாரமாக வீசிய அஸ்வின் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement