டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி அசாத்தியமான சாதனையை படைத்த அஷ்வின் – விவரம் இதோ

Ashwin-3
- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் அதிகமுறை வார்னரின் விக்கெட் வீழ்த்திய பவுலவராக இருக்கிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது.

Smith

- Advertisement -

மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித் புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதில் புஜாரா மற்றும் கில் ஆகியோர் அரை சதம் விளாசியதே அதிகபட்சமாக இருக்கிறது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை வகித்தது. இதைத் தொடர்ந்து 3-வது நாளான நேற்று ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. லபுஸ்சேன் மற்றும் ஸ்மித் விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ashwin 1

அஸ்வின் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா 5 விக்கெட்களை வீழ்த்தி மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அதிக இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 24 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

Ashwin

இதையடுத்து நடைபெற்ற 2-வது இன்னிங்சில் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை அதிகமுறை வீழ்த்திய பந்து வீச்சாளராக அஸ்வின் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 10 முறை வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement