உலகின் நம்பர் 1 வீரரை ஒரே ரன்னில் வெளியேற்றிய தமிழகத்து சுழல் அஷ்வின் – ரசிகர்கள் உற்சாகம்

Ashwin-1
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் முடிவில் 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 74 ரன்களை குவித்தார். அதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

Ashwin

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக பெரிய ரன் குவிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த ஸ்மித் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சமகால கிரிக்கெட்டில் மகத்தான பேட்ஸ்மேனும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் வீரருமான ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்களை குவிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் இந்திய அணிக்கு எதிராக இதுவரை 20 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் 1429 ரன்களை குவித்துள்ளார். எனவே அடிலெய்டு மைதானத்திலும் இந்திய அணிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்து ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்த ஸ்டீவ் ஸ்மித் அவுட்டாகி அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

smith

மேலும் தான் ஒரு சுழல் பந்துவீச்சு கிங் என்பதை அஷ்வின் மீண்டும் ஒருமுறை இந்தப் போட்டியிலும் நிரூபித்தார். ஏனெனில் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் சிறப்பாக பந்து வீசிய அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 18 ஓவர்கள் வீசிய அஷ்வின் 55 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி 3 மெய்டன் ஓவர்களையும் அவர் வீசியுள்ளார்.

ashwin

ஏற்கனவே ஸ்மித்தை இந்தியாவில் புவனேஸ்வர் குமார் 5 ரன்களிலும், ஜடேஜா 8 ரன்களிலும் வீழ்த்தி இருந்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து ஸ்மித்தை குறைந்த ரன்களில் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement