பாக்சிங் டே டெஸ்ட் போட்டியிலும் ஒரே பன்ச்சில் உலகின் நம்பர் 1 வீரரை காலி செய்த அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பாக்சிங் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

bumrah

அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் 48 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இந்திய அணியின் சிறப்பான பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி எந்த கட்டத்திலும் ரன்களை குவிக்கும் முனைப்பு காட்ட முடியாமல் 195 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக அஸ்வின் தனது மாயாஜால சுழலை இந்த போட்டியில் எல்லா இடத்திலும் வெளிப்படுத்தினார். குறிப்பாக 24 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ashwin 1

அதிலும் குறிப்பாக டெஸ்ட் தரவரிசை பட்டியல் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித்தை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். 8 பந்துகளை சந்தித்த ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வினின் சுழலில் புஜாராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதற்குமுன்னர் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும் அஸ்வின் ஸ்மித்தை டக் அவுட்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ashwin 2

இதற்கடுத்து தங்களது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் அகர்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது. கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 159 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement