ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியல். அஷ்வின் படைத்துள்ள ரெக்கார்டு – விவரம் இதோ

Ashwin

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் டெஸ்ட் தொடருக்கு பிறகு தங்களது தரவரிசைப் பட்டியலை வெளியிடும். அதன்படி தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த வீரர்களின் பட்டியலை ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இங்கிலாந்து வீரர் டிம் சவுதி, நீல் வாக்னர் ஆகியோர் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்துள்ளனர். ஐந்தாவது இடத்தில் ஹேசல் வுட் மற்றும் பத்தாவது இடத்தினை மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் பிடித்துள்ளார்கள்.

- Advertisement -

மற்றபடி இங்கிலாந்து வீரர்கள் இருவர், வெஸ்ட் இண்டீஸ் வீரர், ஒருவர் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் என இந்த 10 பேர் பட்டியலில் 9 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனித்துவமான ஒரு சாதனையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதாவது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒன்பது வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்க தனி ஒரு ஸ்பின்னராக அவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஷ்வின் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement