கோலியே நெனச்சாலும் அஷ்வின் விளையாடுறத தடுக்க முடியாது – அஷ்வினுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியது அதுமட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

indvseng

இந்த 5 போட்டிகளின் கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடிய இந்திய அணியானது ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இந்த தொடரில் சமநிலை வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது போட்டியில் செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்குகிறது.

அந்த நான்காவது டெஸ்ட் போட்டியிலும், அதற்கடுத்து வரும் 5வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு பதிலாக விளையாடிய ஜடேஜா அடுத்த 2 ஆட்டங்களிலும் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

jadeja

ஏனெனில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஹாஸ்பிடல் சென்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர் காயத்தால் அவதிப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஜடேஜா அணியில் விளையாடி வருவதால் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஜடேஜா காயம் அடைந்துள்ளதால் நிச்சயம் கடைசி இரண்டு போட்டிகளிலும் அஷ்வின் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Ashwin

இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடினாலும் 5 வது பந்து வீச்சாளராக அஷ்வின் விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement