
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் எளிதான வெற்றி வாய்ப்பு இருந்து மழை காரணமாக தவறவிட்ட இந்திய அணியானது மீண்டும் தங்களது ஆதிக்கத்தை இன்று இரண்டாவது போட்டியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் தங்கள் அணியில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் இங்கிலாந்து அணி பலமாக திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் வெளியேறியதால் உள்ளதால் அவருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா விளையாடுவார் என்று தெரிகிறது.
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே தமிழக வீரரான அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் அஷ்வினுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அவர் நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
ஆனால் கேப்டன் கோலி இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் உடன் தான் இந்த தொடரை சந்திக்கும் என முதல் போட்டியின்போது தெரிவித்திருந்தார். மேலும் சுழற்பந்துவீச்சாளர் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக ஜடேஜா தற்போது இந்திய அணியில் விளையாடி வருகையில் அஸ்வினுக்கு எஞ்சியுள்ள போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காது என்று கருதப்படுகிறது.
ஆனாலும் இன்றைய போட்டியில் அஸ்வின் விளையாட ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பு யாதெனில் ஏற்கனவே கட்டை விரலில் காயம் காரணமாக முதல் போட்டியை தவறவிட்ட இசாந்த் சர்மா இன்றைய போட்டிக்கு முன்பாக தனது உடல் தகுதியை நிரூபிக்காவிட்டால் அல்லது ஒருவேளை அவரால் விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக அஸ்வின் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.