டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனின் முக்கிய சாதனையை முறியடித்த அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதலாவது போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்தியா திரும்பிய நிலையில் ரஹானேவின் தலைமையில் இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது பலமான ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தி அசத்திய இந்திய அணிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ashwin 1

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது தமிழக வீரர் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சும் தான். ஏனெனில் பலமான ஆஸ்திரேலிய அணிக்கெதிராக முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் என 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் அசத்தினார். மேலும் அவர் இந்த போட்டியில் வீழ்த்திய இந்த விக்கெட்டுகள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் முரளிதரன் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 192 முறை இடதுகை பேட்ஸ்மேன் விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை இடதுகை ஆட்டக்காரர்களை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனையை இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் வைத்திருந்தார். அவர் எடுத்த 800 விக்கெட்டுகளில் 191 இடதுகை ஆட்டக்காரர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் விரைவிலேயே முரளிதரன் இந்த சாதனையை கடந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 375 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின் 192 முறை இடதுகை ஆட்டக்காரர்களை வீழ்த்தியுள்ளார். மேலும் இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரம்மாண்டமான சாதனையும் படைத்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அஷ்வின் அசத்தி வருவதால் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் அதிக அளவு ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக அஸ்வின் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement