ஒருமுறை இரண்டு முறையல்ல 27 முறை இதனை செய்து மரண மாஸ் காட்டிய அஸ்வின் – சாதனை விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 385 ரன்கள் குவித்துள்ளது.

jadeja

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்சில் 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்ததால் இன்னும் தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்கள் பின்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இப்போட்டியில் முதல் இன்னிங்சில் தற்போது அஸ்வின் மொத்தம் 41 ஓவர்கள் வீசி 128 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அது யாதெனில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக 65 போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 27 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ashwin 1

மேலும் விரைவாக 100 200 300 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சிறப்பான ஒரு பந்து வீச்சாளரை இவ்வளவு நாட்கள் ஏன் பயன்படுத்தாமல் வைத்திருந்தீர்கள் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அஸ்வினுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement