இங்கிலாந்து மண்ணில் தமிழக வீரர் அஷ்வின் படைத்த மகத்தான சாதனை – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது டெஸ்ட் சாம்பியன்ஷப் கோப்பையை கைப்பற்றியுள்ளது. வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் விக்கெட் வேட்டையை நிகழ்த்தினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர் என்றாலும் அவர்கள், ஆரம்பகட்ட ஓவர்களில் தொடக்க விக்கெட்டை கைப்பற்ற தவறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ashwin 2

- Advertisement -

இரண்டு இன்னிங்சுகளிலுமே ஸ்பின் பௌலரான ரவிச்சந்திரன் அஷ்வின் தான் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை கைப்பற்றி கொடுத்திருக்கிறார். இந்திய அணிக்காக முதல் இன்னிங்சில் டாம் லதாமின் விக்கெட்டை முதல் விக்கெட்டாக எடுத்துகொடுத்த அவர், இரண்டாவது இன்னிங்சிலும் அவரையே முதல் விக்கெட்டாக எடுத்து கொடுத்து இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் செய்ய தவறியதை ஒரு ஸ்பின் பௌலராக செய்து காட்டினார். இப்படி இங்கிலாந்தில் ஸ்பின் பௌலர் ஒருவர், டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சுகளிலுமே முதல் விக்கெட்டை எடுத்து கொடுப்பது கடந்த பத்து வருடங்களில் மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது.

இந்த மூன்று முறையில் அஸ்வின் மட்டுமே இரண்டு முறை இதை செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகான ஐந்து வருடங்களில் இங்கிலாந்தில் எந்த ஒரு ஸ்பின் பௌலரும் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சுகளிலும் முதல் விக்கெட்டை கைப்பற்றி கொடுக்கவில்லை. அதனை, 2015ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னரான மொயின் அலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சுகளிலுமே முதல் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக நிகழ்த்தி காட்டினார்.

Ashwin

அவருக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஷ்வின் 2108ஆம் ஆண்டில் ஒரு முறையும், தற்போது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இரு இன்னிங்சில் முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அஷ்வின்தான் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ashwin 2

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 71 விக்கெட்டுகளுடன் அஷ்வின் முதிலிடத்திலும், 70 விக்கெட்டுகளுடன் பேட் கம்மின்ஸ் இரண்டாஙது இடத்திலும், 69 விக்கெட்டுகளுடன் ஸ்டூவர்ட் ப்ராட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Advertisement