400 விக்கெட் வீழ்த்தியது மட்டுமல்ல மற்றொரு அசத்தலான சாதனையை நிகழ்த்திய அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று 400 ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 77 டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இவருக்கு முன்னர் கும்ப்ளே, கபில்தேவ், ஹர்பஜன்சிங் ஆகியோர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் வேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் இந்திய அணியில் அளவில் படைத்துள்ளார்.

Ashwin

- Advertisement -

இந்த பட்டியலில் அவருக்கு முன்னதாக சர்வதேச அளவில் முரளிதரன் குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தில் இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அஷ்வின் 77 போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஸ்டெயின் 80 போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்திலும், அதனைத் தொடர்ந்து ஹெராத் மற்றும் கும்ப்ளே ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அஷ்வின் இதனை தொடர்ந்து கும்ப்ளேவின் சாதனையான 619 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ள அஸ்வின் விரைவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ashwin 1

அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில் மற்றொரு முக்கிய சாதனையை அஷ்வின் நிகழ்த்தியுள்ளார். அதாவது டெஸ்ட் வடிவத்தில் மட்டுமின்றி ஒட்டு மொத்தமாக சேர்த்து இதுவரை ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 600 விக்கெட்டுகளையும் அஷ்வின் கடந்துள்ளார்.

Ashwin

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடமால் இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் தவிர்க்க முடியாத சீனியர் வீரராக வலம் வரும் அஸ்வின் விரைவில் 500 மற்றும் 600 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று ரசிகர்கள் அவருக்கு இணையதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement