இதை வச்சி என்ன ஆட்டம் போட்ட இனிமே என்ன பண்ணுவ. வார்னரை கலாய்த்த அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் உள்ளது. மேலும் அடுத்து எப்போது இந்த நிலைமை சீராகும் என்று தெரியாத நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டில் முடங்கி உள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தற்போதைக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் முன்னணி வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் தங்களது ரசிகர்களிடம் உரையாடுவது மட்டுமின்றி கருத்துக்களை பரிமாறுவது என்று ஒருபுறம் பயணித்துக் கொண்டிருக்க ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் tik.tok ஆப்பில் விடீயோக்களை பதிவிட்டு பிஸியாக இருந்தார்.

தனது குடும்பத்துடன் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்த வார்னர் குறிப்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள பிரபல வசனங்களையும், பாடல்களையும் வைத்து ஆட்டம் போட்டு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். அவரது வீடியோக்களை பார்க்க தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்தது.

அந்த அளவிற்கு வார்னர் தனது குடும்பத்துடன் கேளிக்கையாக நடனங்களை ஆடி அதனை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது இந்தியாவில் சீனாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 56 செயல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதில் முதன்மையாக இருப்பது டிக் டாக் செயலியாகும்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது பலரும் சமூக வலைதளங்களில் வார்னர் டிக் டாக் இல்லாமல் எப்படி இருப்பார் என்று கிண்டலடித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனக்கே உரித்தான பாணியில் அவரை வேடிக்கையாக கிண்டல் செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அப்போ அன்வர் ? என டேவிட் வார்னர் கிண்டல் செய்துள்ளார்.

அஸ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வரும் வசனத்தை வைத்து அதில் அவர் வார்னரை கிடல் செய்துள்ளார். அதாவது டிக் டாக் இல்லாமல் வார்னர் இனி எப்படி இருக்கப் போகிறார் என்றும் மேலும் அவர் எவ்வாறு ரசிகர்களை மகிழ்விக்க போகிறார் என்றும் அஸ்வின் செல்லமாக கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement