இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இவர் விளையாடுவது சந்தேகம்.? இந்திய அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி சௌதாம்படனில் நடைபெற உள்ளது. இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி காயம் காரணமாக அவர் விளையாடாமல் போனால் அது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பாக அமையும்.

ashwin 2

3வது டெஸ்ட் போட்டியின் முன்னதாக காயமடைந்த அஸ்வின் அணி நிர்வாகத்தின் கோரிக்கைக்காக, 3வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் களமிறங்கினார். முதல் இன்னிங்சில் 1 ஓவர் மட்டுமே அவர் வீசினார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். 3வது போட்டிக்கு அவர் களமிறங்கும் போது, அவர் முழு உடல்தகுதியுடன் இல்லை.

இந்நிலையில், அவருக்கு பதிலாக அணியில் விளையாட ஜடேஜா மட்டுமே உள்ளார். அவரும் சமீபத்தில் எந்த வெளிநாட்டு டெஸ்ட் தொடரிலும் ஆடவில்லை. குறிப்பாக, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இருந்தாலும் ஒரு போட்டியில் கூட அவர் களமிறங்கவில்லை. எனவே இப்போது இங்கிலாந்தில் அவர் எவ்வாறு பந்து வீசுவார் என்பது ஐயம் தான். இருந்தாலும் அவர் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் சிறப்பாக வீசுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ashwin india

மூன்று டெஸ்ட் போட்டிகள் இதுவரை முடிந்துள்ளன. அதில், 2-1 என்ற விகிதத்தில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. 4வது போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை சமன் செய்யும், எனவே அந்த முனைப்புடன் இந்திய அணி இந்த போட்டியில் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும் முன்னைப்பில் விளையாடும். எனவே வரும் போட்டி கடந்த போட்டியை போல் சுவாரசியமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.