முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் விளையாடுவது சந்தேகம் – வெளியான தகவல்

kohli-ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

ashwin 2

- Advertisement -

ஒருநாள் அணியில் கடந்த சில ஆண்டுகளாக அஷ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். அதற்கு காரணம் குலதீப் மற்றும் சாஹலின் ஜோடியின் தேர்வுதான். இந்நிலையில் தற்போதைய டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு இடம் கிடைப்பது தற்போது சந்தேகமாகி உள்ளது.

அதன் காரணம் யாதெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் குல்தீப் சிறப்பாக பந்துவீசினார். அதனால் கோலி முதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவையும், இரண்டாவதாக ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்ய உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ashwin india

இதனால் நாளை மறுதினம் துவங்க உள்ள போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அஸ்வினின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement