இதுக்குமேல நான் எப்படி சொல்றதுன்னு தெரியல. வித்தியாசமான முறையில் மக்களை எச்சரித்த அஷ்வின் – ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் தற்போது பாதித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விழிப்புணர்வாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் டுவிட்டரில் தன் பெயரையே வித்தியாசமாக மாற்றியுள்ளார்.

Ashwin

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 500 பேரை தாண்டியுள்ளது. தற்போதைய இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அரசு அடுத்த 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால் தான் வைரஸ் பரவுதலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறி வருகின்றனர்.

இருந்தாலும் இதன் தாக்கத்தை அறியாதவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து மக்களுக்கும் தங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் அக்கவுண்ட் பெயரை ‘லெட்ஸ் ஸ்டே இன்டோர்ஸ் இந்தியா’ இந்தியா என்று மாற்றியுள்ளார்.

- Advertisement -

மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நெருக்கடியாக இருக்கும் ஆனால் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டாம் என்று கூறியுள்ளார் அஸ்வின். பிரபலங்கள் பலரும் தங்களுக்கு தெரிந்த வகையில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழ் நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை “உள்ளே போ” என்று மாற்றி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. என்னதான் பலரும் பலவழிகளில் விழிப்புணர்வு வழங்கி வந்தாலும் இந்த வைரஸின் தீவிரம் தெரியாமல் வேடிக்கையாக வெளியில் திரிபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.