இந்த இருவரில் ஒருவருக்கு பதிலாக அஷ்வின் நிச்சயம் 4 ஆவது டெஸ்ட்டில் ஆடுவார் – விவரம் இதோ

Ashwin-1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதனால் அடுத்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும் என்ற காரணத்தினால் அடுத்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே இன்னும் பலத்த போட்டியாக அமைய உள்ளது.

indvseng

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் தேர்வான தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை மூன்று போட்டிகளிலும் விளையாட வில்லை. அவருக்கு பதிலாக விளையாடிய ஜடேஜா பேட்டிங்கில் ஓரளவு சுதாரித்து விளையாடினாலும், பந்துவீச்சில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்பட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்கேற்றார்போல் தற்போது காயம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஜடேஜா ஒருவேளை 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அஸ்வின் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அப்படி இந்த வாய்ப்பு இல்லை என்றாலும் அடுத்ததாக இந்திய அணியின் சீரியல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கடந்த இரண்டு போட்டிகள் ஆகவே சொதப்பலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

jadeja 2

அதிலும் குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை அவரது ரன்அப்பிலும் சற்று தொய்வும், அவர் விக்கெட் வீழ்த்த திணறுவதும் தெரிகிறது. இதன் காரணமாக ஜடேஜா அல்லது இஷாந்த் சர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக அஸ்வின் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ashwin

ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement