அஸ்வினை ஏன் புறக்கணிக்கிறீர்..! அவரை இந்த வரிசையில் பயன்படுத்துங்கள் ..! கம்பிரின் புதுமையான ஐடியா..!

gambir
- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் , 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைபற்றிய இந்திய ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்த இரு தொடரிலும் இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இந்திய அணியில் துடுப்புசீட்டு பந்து வீச்சாளராக விளங்கி வருகின்றனர்.

இவர்கள் இருவரின் வருகைக்கு பின்னர் இந்திய அணியின் அனுபவமிக்க பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த அஸ்வின் மட்டும் ஜடேஜா ஆகிய இருவரும் டெஸ்ட் பந்துவீச்சாளராக முத்திரை குத்தப்பட்டு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பளிக்கபடாமல் இருந்து வருகிறது. ஆனால், அஸ்வினை மீண்டும் ஒரு நாள் அணியில் சேர்த்து அவரை எப்படி பயன்படுத்தலாம் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் யோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய கவுதம் கம்பீர் “ஒரு நாள் அணியில் சாஹல், குல்தீப் அணியில் இருந்தாலும் அஷ்வினையும் அணியில் சேர்க்கலாம், அப்படி சேர்க்கப்பட்டால் இந்திய அணியில் மூன்று ஸ்பீன்னர்கள் இருப்பார்கள், இது இந்திய அணிக்கு ஒரு சிறப்பான விடயமாக அமையும். அதுமட்டுமல்லாமல் அஷ்வின் பந்துவீசுவதோடு பேட்டிங்கும் சிறப்பாக ஆடக்கூடியவர்.
gautam-gambhir
எனவே, அவரை நான்காவது வீரராகவோ அல்லது 7வது வீரராகவோ களமிறக்கலாம். அதனால் ஒரு ஸ்பின் ஆல்ரவுண்டரும் இந்திய அணியில் இருப்பது ஒரு கூடுதல் பலமாக இருக்கும் . அதே போல பேட்டிங் ஆர்டரில் அஷ்வின் நான்காவது இடத்திலும் ராகுலை 5வது இடத்திலும் களமிறக்கலாம். ஒரு வேலை ராகுலை 4வது இடத்தில் களமிறக்கினால் அஷ்வினை ஹர்திக் பாண்டியாவிற்கு அடுத்து 7வது வீரராக களமிறக்கலாம் “என்று யோசனை கூறியுள்ளார் கம்பீர்.

- Advertisement -
Advertisement