வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் சாதித்த அஷ்வின் புதிய சாதனை – விவரம் இதோ

Ashwin

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

Ashwin

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த புனே ஆடுகளத்தில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்க அணியை திக்குமுக்காட வைத்தார் மேலும் நேற்று எடுத்த 4 விக்கெட் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கடந்து அஷ்வின் சாதித்துள்ளார்.

மொத்தம் 28.4 ஓவர்கள் வீசி 69 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக டிகாக் மற்றும் டூபிளிஸ்சிஸ் விக்கெட் போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் கடைசியாக பிளாண்டர் மற்றும் மஹாராஜ் ஆகியோர் பெரிய பாட்னர்ஷிப் அமைக்க அந்த பாட்னர்ஷிப்பையும் அவர் மஹாராஜ் விக்கெட்டை வீழ்த்தி முறித்தார். வழக்கமான அவரது பந்துவீச்சில் இருக்கும் வேகத்தை அவர் நேற்று குறைத்து அதிக அளவு ஸ்லோ பந்துகளை வீசினார்.

Ashwin 1

இப்படி நேற்றைய போட்டியில் அஷ்வின் சிறப்பாக செயல்பட காரணம் யாதெனில் மைதானத்திற்கு ஏற்றவாறு அஷ்வின் வேகத்தையும், ஸ்விங் அளவையும் மாற்றுகிறார். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நேற்று அஷ்வின் பந்துகளை வழக்கத்தை விட ஸ்லோவாக வீசினார். அந்த ஸ்லோ பந்துகள் நேற்று அவருக்கு கைகொடுத்தன. குறிப்பாக டூபிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்திய பந்து பார்ப்பதற்கே அருமையாக இருந்தது என்று குறிப்பிடலாம்.