டீம்ல சேக்கலனா என்ன ? நான் பிராக்ட்டீஸ்ஸை விடமாட்டேன் – வினோதமான பயிற்சியில் இறங்கிய அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சேர்க்கப்படாதது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பெரிய விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. மேலும் விராட் கோலி அஷ்வினை நீக்கியது தவறு என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பெரிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த விடயங்கள் எது குறித்தும் கவலைப்படாத அஸ்வின் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் இறங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இம்முறை பவுலிங் பயிற்சியில் ஈடுபடாமல் வித்தியாசமான ஒரு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதன்படி அஸ்வின் தற்போது இடது கையில் பேட்டிங் பிடிப்பது போன்று பயிற்சி செய்து அதனை புகைப்படமாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஷ்வின் செய்த இந்த வினோதமான முயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் கூட அந்த புகைப்படத்திற்கு “இடதுகை ஆட்டக்காரராக அழகாக இருக்கிறீர்கள், கிளாசி” என்று அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளார். அஸ்வின் பகிர்ந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Advertisement