இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு இவர்கள் இருவரே முக்கிய காரணம் – கோலி புகழாரம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வானார். ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஷமி என அனைவரும் கலக்கினார்கள். ஷமி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி முடிந்து போட்டியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி கூறியதாவது : முதல் மூன்று நாட்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம் 500 ரன்களை கடக்கும் போது நாங்கள் போட்டியில் நல்ல நிலையில் இருப்பதை உணர்ந்தோம். ஆனாலும் தென்னாபிரிக்க அணி எங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

Ind 1

இருப்பினும் நமது அணியில் உள்ள வீரர்கள் பந்துவீச்சில் அசத்தினார்கள். குறிப்பாக ஷமி, இஷாந்த் என சிறப்பான பந்து வீச்சாளர்கள் நம்மிடம் உள்ளனர். மேலும் இந்த போட்டியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆட்டத்தை திருப்பி விட்டார்கள். அவர்களின் சிறப்பான பந்துவீச்சு இந்த போட்டியின் வெற்றிக்கு காரணம் என்று நான் கூறுவேன். இரண்டாவது இன்னிங்சில் ஷமி அருமையாக பந்து வீசினார் என்று விராட் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement