பேட்ஸ்மேனுக்கு நிகராக சாதனை படைத்த அஸ்வின்.! ஆல்ரவுண்டர் வரிசையில் இடம் பிடித்து அபாரம்.!

ashwin 4
- Advertisement -

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். கடந்த ஓராண்டிற்கு மேலாக டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்ட அஸ்வின் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி ஆல்ரவுண்டர்கள் படைத்த சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார் அஸ்வின்.

ashwin 2

- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் விளையாடி வரும் அஸ்வின் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பர்மிங்ஹாமில் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

அதே போல கடந்த 9 ஆம் தேதி துவங்கபட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 38 பந்துகளில் 29 ரன்களை குவித்திருந்த அஸ்வின் சர்வதேச அளவில் 3000 ரன்களை கடந்துள்ளார் இதன் மூலம் சர்வதேச அளவில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்களுக்கு மேல் குவித்த இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் அஸ்வினும் இணைந்துள்ளார்.

ashwin bat

இதன் மூலம் இந்திய அணியின் கபில் தேவ், கும்ப்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்களை தொடர்ந்து அஸ்வின் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுவரை சர்வதேச அளவில் 60 டெஸ்ட் போட்டிகள், 111 ஒருநாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், மொத்தம் 217 சர்வதேச போட்டிகளில் விளையாடி 525 விக்கெட்டுகளையும் 3013 ரன்களை குவித்துள்ளார்.

Advertisement