அசத்தும் குல்தீப்.! டெஸ்ட் போட்டியில் ஒதுக்கப்படுவார்களா அஸ்வின், ஜடேஜா..! கோலி சொன்ன பதில்..!

Kohli

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதை தொடர்ந்து நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது.

kuldeep

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி முடித்து விட்டது. அதை தொடர்ந்து தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரில் இளம் வீரர்களான குல்தீப் யாதவ், கே எல் ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடி அசத்தி வருகின்றனர்.

மேலும், இந்திய அணியில் சொற்பமான அனுபவமிக்க வீரர்கள் தான் இருக்கின்றனர். இந்திய அணியின் கேப்டன் கோலி இந்த இங்கிலாந்து தொடரில் சூழல் பந்து வீச்சாளர்களை தான் அதிகம் நம்பி வருகிறார். அதற்கு ஏற்றார் போல குல்தீப் யாதவ், சஹல் ஆகியோர் சிற்ப்பாகவே பந்து வீசி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த ஒரு நாள் தொடர் முடிந்த பின்னர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்க உள்ளது.

தற்போது இருக்கும் நிலவரப்படி குல்தீப் மற்றும் சஹல் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் கேப்டன் கோலியின் அபிமானத்தை பெற்றுவிட்டனர். சமீபத்தில் முதல் ஒரு நாள் போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த கோலியிடம் ‘டெஸ்ட் தொடரில் குல்தீப் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு , அதுகுறித்து ஆச்சர்யங்கள் நிகழலாம் என்று பதிலளித்திருந்தார்.

virat-kohli

இதனால் டெஸ்ட் தொடரிலும் குல்தீப் பங்கேற்பது உறிதியோ என்று சந்தேகம் எழுகிறது. ஒருவேளை குல்தீப் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டால் இந்திய அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகவும் கேள்விக்குறியாக தான் இருக்கும். அதே போல குல்தீப் யாதவ் இனி நடக்கவிருக்கும் இரன்டு ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசினால், அவர் டெஸ்ட் அணியில் இடம்பெறும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.