இந்திய ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய மற்றொரு வீரர். மாற்று வீரர் அறிவிப்பு – விவரம் இதோ

indvsaus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

மேலும் டி20 தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை படுத்தி உள்ளது. இந்த டி20 தொடர் ஆரம்பித்ததிலிருந்தே இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி ஆகிய இரண்டு அணிகளுமே பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த போட்டியில் காயமடைந்த ஜடேஜா டி20 மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் அடைந்த காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் பிரதான டேவிட் மற்றும் டி20 போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஷார்ட் அணியில் இணைந்துள்ளார். தற்போது மற்றொரு வீரரான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் முதல் டி20 போட்டியில் அடைந்த காயம் காரணமாக ஆஷ்டன் அகர் தற்போது எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மாற்று வீரராக நேதன் லையன் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் 2-வது மற்றும் 3-வது போட்டியில் அவரே ஜாம்பாவுடன் இணைந்து பந்து வீசுவார் என்று தெரிகிறது அது மட்டுமன்றி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச்சுக்கு ஏற்பட்ட காயம் குறித்தும் கவலை கொண்டுள்ளது. அவரும் காயத்தில் இருந்து விலகினால் அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement