உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவர் கண்டிப்பா விளையாடனும் – ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

Nehra
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, எந்த அணி டெஸ்ட் சாம்பியனாக வலம் வரப்போகிறது என்பதை தெரித்து கொள்ள உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருப்பதால், இந்த இறுதிப் போட்டியானது கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப நாட்களாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு, பல்வேறு முன்னாள் வீரர்களிடம் இருந்தும் ஆலோசனைகள் குவிந்து வருகின்றன.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ராவும் இந்திய அணிக்கு ஒரு ஆலோசணையை வழங்கி இருக்கிறார். அந்த ஆலோசனையில் அவர் கூறியிருப்பதாவது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் மைதானம் எந்த விதத்தில் இருக்கிறது என்பதைப் பார்த்து தான், இந்திய அணி ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை போட்டி நடைபெறும் பிட்ச்சில் புற்கள் அதிகமாக வளர்க்கப்பட்டு இருந்தால், இந்திய அணியானது ஜாஸ்பீரித் பும்ரா, முஹம்மது ஷமி, இஷாந்த் சர்மாவுடன் சேர்த்து நான்காவது வேகப் பந்து வீச்சாளராக முஹம்மது சிராஜையும் அணியில் விளையாட வைக்க வேண்டும்.

ஒருவேளை பிட்ச் அப்படி இல்லாமல் போனால், நாம் தாராளமாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு ஸ்பின்னர்களோடு களமிறங்கலாம் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகப் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கும். போட்டிக்கு முன்பாக பிட்ச்சில் புற்களை வளரவிட்டிருந்தால், அது வேகப் பந்து வீச்சுக்கு இன்னும் அதிக சாதகமாக அமையும். அதே வேளையில் அது போன்ற பிட்ச்சில், ஸ்பின் பௌலிங்கில் பந்து அதிகமாகவும் திரும்பாது. மேலும் இந்த இறுதிப் போட்டி டியூக் வகை பந்துகளில்தான் நடைபெற இருக்கிறது. இந்த வகை பந்துகளும் வேகப் பந்து வீச்துக்கு மட்டுமே நன்றாக ஒத்துழைக்கும்.

Siraj 1

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆஷிஸ் நெஹ்ரா இதுபோன்ற ஒரு ஆலோசனையை வழங்கி இருக்கிறார். இந்த போட்டி குறித்துமேலும் பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, இறுதிப் போட்டிக்கு முன்பாக நமக்கு நிறைய நேரம் இருப்பதால், வீரர்களின் உடல் நிலை மற்றும் பயிற்சியின்போது அவர்களின் செயல்பாடு இதையெல்லாம் நன்கு ஆராய வேண்டும். இதை கவனித்த பிறகே போட்டிக்கான பதினொரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அணியில் இடம்பிடித்தாலும், அது நமது அணியின் பேட்டிங் வரிசையை நீண்டதாக மாற்றுவதால் அதுவும் அணிக்கு நல்லது தான் என்று அவர் கூறியிருக்கிறார்.

Siraj 2

இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்தியா அணியானது, ஜூன் மாதம் 2ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்படும். அங்கு சென்ற பின் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு, நியூசிலாந்துடன் இறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இந்த போட்டி ஜூன் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் முடியவடைய இருக்கிறது.

Advertisement