ஒரே ஒரு போட்டியை கணக்கில் வைத்து இவரை இந்திய அணியில் இருந்து நீக்கியது தவறு – ஆஷிஷ் நெஹ்ரா காட்டம்

nehra
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியானது வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்டன் மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி முடிந்தவுடன் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடக்கவிருக்கிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம், உலக டெஸ்ட் சாம்யின்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடர் ஆகியவற்றிற்கான 20 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணியில் நான்கு கூடுதல் வீரர்களும் பங்கு பெற இருக்கின்றனர்.

IND

- Advertisement -

அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், இளம் வீரரான ப்ரித்வி ஷாவின் பெயர் இடம்பெறவில்லை. ப்ரத்வி ஷாவின் பெயரை சேர்க்காத, இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவின் மீது கிரிக்கெட் ரசிகர்களும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சனங்களை வைத்து வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா இந்திய தேர்வுக் குழுவை வெளிப்படையாகவே சாடியுள்ளார். இணையத்திற்கு பேட்டியளித்த ஆஷிஸ் நெஹ்ரா கூறியிருப்பதாவது,

ஒரே ஒரு போட்டியில் ப்ரித்வி ஷா சரியாக ஆடாமல் போனதால் அவரை அணியிலிருந்து நீக்கியது மிகக் கடுமையான முடிவாகும். அவர் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும்போது, 30-40 போட்டிகள் விளையாடிய அனுபவ வீரராக இல்லாமல் இருந்தார். எந்த ஒரு இளம் வீரருக்கும் தனது திறமையை சரிபடுத்திக் கொள்ள சில போட்டிகளாவது தேவைப்படும். எனவே அந்த ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் கொண்டு அவரை அணயிலிருந்து நீக்கியது சரியான முடிவாக இருக்காது என்று அவர் கூறினார்.

Shaw

இந்தியாவிற்காக, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று தந்த ப்ரித்வி ஷா, இந்தியாவிற்காக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ஆனால் அதற்பு பிறகு காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாத அவர், மீண்டும் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கினார். அப்போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகிய ப்ரித்வி ஷா, இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அந்தப் போட்டியை காரணமாக வைத்து தான் இப்போது இந்திய தேர்வு குழு ப்ரித்வி ஷாவை அணியிலிருந்து நீக்கி இருக்கிறது. இதைத்தான் அந்த பேட்டியிலும் ஆஷிஸ் நெஹ்ரா குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். மேலும் பேசிய ஆஷிஸ் நெஹ்ரா,

- Advertisement -

கடந்த வருடம் ஆஸ்திரேலியா தொடரை இந்தியா கைப்பற்றி இருந்தாலும், ப்ரித்வி ஷாவிற்கு மற்ற மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்காமல் பெஞ்சில் உட்கார வைத்ததை நினைத்து வருந்தினேன். இதுபோல தான் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லின் இறுதி போட்டியிலும், டெல்லி அணியானது ப்ரித்வி ஷாவை வெளியில் அமர வைத்து தவறு இழைத்தது. அந்த தொடரில் அவர் சில நல்ல இனிங்ஸ்களை ஆடியிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக ரஹானேவை அணியில் எடுக்க நான் ஒருபோதும் விரும்பியிருக்க மாட்டேன். டி20 ஆட்டத்திற்கு ப்ரித்வி ஷா, ஹெட்மையர், ரிஷப் பன்ட போன்ற அதிரடியான வீரர்கள்தான் தேவை என்று அந்த போட்டியில் கூறியிருக்கிறார் ஆஷிஸ் நெஹ்ரா.

கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விடுவிக்கப்பட்ட ப்ரித்வி ஷாவிற்கு, இந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருந்தாலும் விஜய் ஹசாரே ட்ராபியில் மீண்டும் தனது பழைய ஃபார்மை மீட்டுக் கொண்டு வந்த ப்ரித்வி ஷா, அந்த தொடரில் 827 ரன்கள் அடித்திருந்தார். மேலும் இந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடிய அவருக்கு, இந்திய அணியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

Advertisement