இலங்கை அணிக்கெதிரான இந்த தொடரில் அவங்க 2 பேருக்கும் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் – ஆஷிஷ் நெஹ்ரா

Nehra
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது மிகப்பெரிய பின்னடைவு சந்தித்துள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியை சமன் செய்த இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுதி இந்த தொடரில் தற்போது (0-1) என்ற கணக்கில் பின்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வருகிறது. இந்த பொதப்பலுக்கு கம்பீரின் முடிவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கேட்டுக் கொண்டும் அவர்களுக்கு ஓய்வை வழங்காமல் தொடர்ந்து அணியில் விளையாடுமாறு கம்பீர் கூறினார். இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் :

- Advertisement -

அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கியிருக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து தான் இந்திய அணி அடுத்த ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வு வழங்கிவிட்டு வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

இதையும் படிங்க : ஒரு காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருந்த அந்த பலம் இப்போ காணாம போச்சு.. ஆகாஷ் சோப்ரா வேதனை

ஏனெனில் புதிய பயிற்சியாளரான கம்பீர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். ஆனால் அவர்கள் ஒன்றும் கம்பீருக்கு புதிது கிடையாது ஏற்கனவே நன்கு பழக்கப்பட்டவர்கள் தான். எனவே இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பை கொடுத்துவிட்டு அவர்களுக்கு ஓய்வு அளித்திருக்கலாம் என ஆஷிஷ் நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement