தோல்வியை கூட ஏத்துக்கலாம். ஆனா இந்திய அணி பண்ண இந்த தப்பை ஏத்துக்க முடியாது – நெஹ்ரா வருத்தம்

nehra
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை, மேலும் பல தவறுகளை அவர்கள் செய்தனர் என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த இந்திய அணி வரலாறு காணாத வகையில் டெஸ்ட் தொடரை 2 – 1 என்கிற கணக்கில் கைப்பற்றி தொடரை சிறப்பாக வென்றது.

anderson

- Advertisement -

அதே வெற்றி முனைப்புடன் இந்தியா வந்தடைந்த இந்திய வீரர்கள் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வெல்லும் முனைப்புடனே இருந்தனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்பொழுது நடந்து முடிந்துள்ளளது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு தக்க பதிலடி கொடுக்க முடியாமல் இறுதிவரை போராடி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் இத்தகைய தோல்வி, அதிலும் குறிப்பாக தனது சொந்த மைதானத்தில் இந்தியா தோல்வியுற்றது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம். இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஷீஸ் நெஹ்ரா இந்திய அணியின் இந்த தோல்விக்கு இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாததே காரணம் என்றும் மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மொத்தம் 27 நோ-பால்கள் வீசியுள்ளனர், இது மிகவும் கவலைக்கிடமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

ashwin 2

இது ஒன்றும் தெருவில் சிறுவர்கள் விளையாடும் சாதரண போட்டி கிடையாது, இது சர்வதேச அளவிளான போட்டயாகும் இவ்வளவு நோபால் வீசுவது என்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும். நோ பால் இன்றி பந்து வீசுவதற்கான பயிற்சியை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, ரவிச்சந்திர அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இவ்வாறு செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தனது கருத்தை கவலைான நிலையில் வெளிப்படுத்தி உள்ளார்.

Ishanth

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு நோ பால் இன்றி பந்து வீசுவதற்கான பயிற்சியை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். சபாஷ் நதிம் 9, பும்ரா 8 , இஷாந்த் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 5 நோ பால்கள் வீசியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement