இவர் இப்படி அதிரடியாக விளையாடி நான் பாத்ததே இல்ல – ஆஷிஷ் நெஹ்ரா வியப்பு

Nehra

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைய, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

indvseng

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 432 ரன்கள் குவித்து 354 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் ஏற்பட்ட குறையை சரிசெய்யும் விதமாக தற்போது 2-வது இன்னிங்சில் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோரது பாட்னர்ஷிப் இந்திய அணிக்கு வலு சேர்த்தது அதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் கோலியுடன் விளையாடி வரும் புஜாரா தனது அதிரடியான ஆட்டத்தை இந்த இரண்டாவது இன்னிங்சில் வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே பொதுவாக மிகவும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்கும் புஜாரா இந்த போட்டியில் தனது வழக்கமான ஆட்டத்திலிருந்து மாறுதலாக பவுண்டரிகளை விளாசி வருகிறார்.

குறிப்பாக அவர் இந்த 2ஆவது இன்னிங்சில் குவித்துள்ள 91 ரன்களில் 15 பவுண்டரிகளை அவர் விளாசியுள்ளார். புஜாராவின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்தது மட்டுமின்றி தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவையும் வியக்க வைத்துள்ளது. புஜாராவின் இந்த அதிரடியான ஆட்டம் குறித்து பேட்டி அளித்துள்ள அவர் கூறுகையில் : புஜாரா இப்படி விளையாடி நான் பார்த்ததே இல்லை.

- Advertisement -

எப்பொழுதுமே மெதுவாகவே ஆடும் அவர் இந்த இன்னிங்சில் நேர்மறையான சிந்தனையுடனும் தைரியமாக பந்தினை அடித்து விளையாடுகிறார். களத்தில் இறங்கும் முன்னரே அவர் இந்த முடிவினை எடுத்து இருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் தற்போது அவர் திட்டமிட்டு சரியாக விளையாடி வருகிறார். எப்போதும் பொறுமையாகவே விளையாடுவார் என்று விமர்சனம் அவர் மீது உள்ளது அப்படியிருந்தும் அவர் இதேபோன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அசாத்தியமானது தான்.

pujara 2

விமர்சகர்கள் எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இந்த இரண்டாவது இன்னிங்சில் புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என அவரை புகழ்ந்து நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement