பும்ராவை விட இவரது பந்துவீச்சு ஒருபடி மேலே உள்ளது. புகழின் உச்சத்துக்கு அவர் செல்வார் – ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

- Advertisement -

முகமது சிராஜ் சமீப காலங்களாக மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஜஸ்பிரித் பும்ரா அளவுக்கு நன்றாக பந்து வீசியதால் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் இல்லை என்றும் ஒரு சிலர் அவரை விட இவர் நன்றாக பந்து வீசுகிறார் என்றும் கூறிவந்த நிலையில், இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா சிராஜ் ஒன்றும் பும்ராவுக்கு பின் தங்கியவர் இல்லை என்று கூறியுள்ளார்.

siraj

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி மிக அற்புதமாக விளையாடியதன் மூலம் இந்திய அணி உள்ளே நுழைந்தவர் தான் பும்ரா. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் மத்தியில் மூன்றாவது இடத்தில் பும்ரா இருக்கிறார். ஹர்பஜன்சிங், இர்பான் பதான் இவர்கள் இருவரை தொடர்ந்து இவர் மூன்றாவது இடத்தில் உள்ளது அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு முறை ஹாட்ரிக் விக்கெட்டையும் இவர் ஒருமுறை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டு அற்புதமாக பந்து வீச வரும் பும்ரா இதுவரை 19 டெஸ்ட் போட்டிகள் 67 ஒருநாள் போட்டிகள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 250 சர்வதேச படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். அதேபோல ஐபிஎல் போட்டிகளில் 97 போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் தலைசிறந்த பலராக தற்போது அவர் உள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Siraj-3

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே முகமது சீராஜ் நன்றாக பந்து வீசி வருகிறார் என்று ஆசிஸ் நெஹரா கூறியுள்ளார். குறிப்பாக இந்தியா ஏ அணிக்காக மிக அற்புதமாக ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி 5-6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்று ஆசிஸ் நெஹரா குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடிய வீரர்கள் பின்னர் வந்து வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளில் தொலைத்ததை நாம் இதற்கு முன்னாள் பல முறை கண்டுள்ளோம். அதேபோல முகமது சிராஜ் தற்பொழுது வெள்ளை பந்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Siraj

தற்போது முகமது சிராஜ் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் மிக அற்புதமாக பந்து வீசி வருவதாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒன்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பின்னர் கிடையாது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். முகமது சிராஜ் அவருடைய உடல் தகுதியை இன்னும் நன்றாக பலப்படுத்த வேண்டும். இன்னும் அவர் கடினமாக உழைக்க வேண்டும், அப்படி உழைக்க ஆரம்பித்தால் அவரது புகழுக்கு அந்த வானமே இல்லை என்று இறுதியாக ஆசிஸ் நெஹரா முகமது சிராஜை புகழ்ந்து கூறியுள்ளார்.

Advertisement