பந்துவீச்சில் இந்திய அணியின் உண்மையான மேட்ச் வின்னர் இவர்தான் – ஆசிஷ் நெஹ்ரா ஓபன் டாக்

Nehra-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மேட்ச் வின்னர் வீரர்களை கொண்டிருக்கிறது. தனி வீரராக இருந்து ஒரு சிலரே போட்டியை வென்று கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, சச்சின், டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட், லக்ஷ்மனன் என பலர் இருந்தார்கள்.

dravid

தற்போதைய காலகட்டத்தில் யுவ்ராஜ் சிங்,கோலி, தோனி என்று மேட்ச் வின்னர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால் அந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் வின்னர் என்று கூறக்கூடிய அப்படி ஒரு தனி வீரர் இல்லை. ஆனாலும் ஒரு சில வீரர்கள் அவ்வப்போது வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா பந்துவீச்சாளர்களில் ஒரு வீரரை கைகாட்டி அவர்தான் உண்மையில் இந்திய அணியில் மேட்ச் வின்னர் என்று பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

kumble 1

அனில் கும்ப்ளேவை நான் முதல் முறையாக இந்திய அணிக்கு ஆடும் போது நான் அவரை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். அப்போது அவர் பெரிய கண்ணாடியை அணிந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். பந்துவீச்சாளர்களில் யார் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று கேட்டால் நான் இவரைத்தான் காட்டுவேன். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் ஆசிஸ் நெஹரா.

Kumble

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய நாட்டிற்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் அனில் கும்ப்ளே தான் டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தம் 619 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அதேபோன்று 1999ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸ்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement