- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் வேற மாதிரி யோசிக்கிறாரு.. பாண்டியா நீக்கப்பட்டதில் ஆச்சர்யப்பட ஒன்னுமில்ல.. ஆஷிஸ் நெஹ்ரா ஓப்பன்டாக்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் சர்மாவுக்கு பின் டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.

அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியிலும் பாண்டியா துணைக் கேப்டனாக முக்கிய பங்காற்றினார். ஆனால் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக விளையாடும் அனைத்து தொடர்களிலும் பாண்டியா விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மறுபுறம் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு நிலையாக விளையாடும் கேப்டனை விரும்புகிறார்.

- Advertisement -

ஆச்சர்யம் இல்லை:
அதனால் அவருடைய பரிந்துரையை ஏற்று ஹர்திக் பாண்டியாவை மொத்தமாக கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சூரியகுமாரை புதிய கேப்டனாகவும் சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் அறிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தமக்கு ஆச்சரியமில்லை என்று முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வேறு கோணத்தில் சிந்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனவே கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் என்று தெரிவிக்கும் நெஹ்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்களை பார்த்து நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆம் உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருந்தார். ஆனால் தற்போது புதிய பயிற்சியாளர் வந்துள்ளார். ஒவ்வொரு பயிற்சியாளரும் கேப்டனும் பயிற்சியாளரும் வித்தியாசமான எண்ணங்களை கொண்டிருப்பார்கள்”

- Advertisement -

“அந்த வகையில் தற்சமயத்தில் கம்பீர் இந்த கோணத்தில் சிந்திக்கிறார். அஜித் அகர்கர், கம்பீர் இதைப் பற்றி தெளிவாக சொல்லி விட்டார்கள். ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஹர்திக் பாண்டியா குறைவாகவே விளையாடுகிறார். இருப்பினும் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்கிறார். குறிப்பாக 4 வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டுமென்ற சூழ்நிலையில் இம்பேக்ட் வீரர் இல்லாத சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சமநிலையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார்”

இதையும் படிங்க: பழைசை மறந்து 6 வருஷமாச்சு.. ஹர்டிக் பாண்டியாவை கழற்றி விட்டது சரி தான்.. தேவ் வாட்மோர் அதிருப்தி

“பாண்டியா மட்டுமின்றி கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் சமீப காலங்களில் கேப்டனாக செயல்பட்டனர். மறுபுறம் 24 – 25 வயதாகும் சுப்மன் கில் இன்னும் முன்னேற்றங்களை சந்திப்பார். 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட உள்ள அவர் கற்றுக்கொள்வார். இளம் வீரர் அல்லது அனுபவமிக்கவர் போன்ற பாகுபாடு இல்லாமல் அவர் அனைவரிடமும் விவாதித்து கற்றுக்கொள்ளக் கூடியவர்” என்று கூறினார்.

- Advertisement -