பாண்டியா போனாலும்.. எங்களிடம் அந்த தமிழக வீரர் ரெடியா இருக்காரு.. குஜராத் கோச் நெஹ்ரா பேட்டி

Ashish Nehra
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளதால் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி காணப்படுகிறது. ஏனெனில் 2022 சீசனில் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி முதல் வருடத்திலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை வென்றது. ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்டு மும்பை அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

மறுபுறம் என்ன தான் கடந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டாலும் சுப்மன் கில் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாதவர். எனவே இம்முறை அவரது தலைமையில் குஜராத் முதலில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராட உள்ளது. அதே போல இம்முறை பாண்டியா போன்ற ஃபினிஷிங் செய்யக்கூடிய திறமை கொண்ட வீரர் இல்லாதது குஜராத்துக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தமிழக வீரர்களை நம்பி:
இந்நிலையில் பாண்டியா போனாலும் இந்த வருடம் புதிதாக 7.4 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரர் சாருக்கான் ஹாலிவுட் நடிகர் ஷாருக்கான் போல தங்களுடைய அணிக்கு அசத்துவார் என்று குஜராத் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். மேலும் கடந்த வருடம் அசத்திய மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் உட்பட இருக்கும் வீரர்களை வைத்து தங்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நாங்கள் ஷாருக்கான் முதன்மை நடிகராக வரப்போவதை பார்க்கப் போகிறோம். ஐபிஎல் மிகவும் பெரிய தொடராகும். அதில் மே மற்றும் ஜூன் மாதங்களில் சூழ்நிலைகள் கடினமாக இருக்கும். அது வீரர்களுக்கு கடினமாக இருக்கும். குறிப்பாக பவுலர்களுக்கு சவாலாக இருக்கும். அதில் காயங்களும் ஏற்படலாம். எனவே எங்களிடம் உள்ள ஒவ்வொரு அனுபவமிக்க வீரர்களும் மிகவும் முக்கியமானவர்கள்”

- Advertisement -

“ஸ்பென்சர் ஜான்சன் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாக விளையாடியுள்ளார். ஓமர்சாய் ஆல் ரவுண்டராக அசத்தக்கூடிய திறமையைக் கொண்டுள்ளார். எனவே அவர்களுக்கு இது சிறந்த ஐபிஎல் தொடராக அமையும் என்று நம்புகிறேன். அதே சமயம் ஹர்திக் பாண்டியா, ஷமி போன்றவர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் புதிய வீரர்கள் வந்து அசத்துவார்கள்”

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க.. எந்த மாற்றமும் இல்ல.. 2024 ஐ.பி.எல் தொடர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ

“இப்படித் தான் அணிகள் நகர்கின்றன. ஒவ்வொரு அணியும் 25 வீரர்களைக் கொண்டது. அதில் 12 வீரர்கள் விளையாடினாலும் பாண்டியா, ஷமியின் இடத்தை நிரப்புவது கடினம். இருப்பினும் உமேஷ் யாதவ் போன்றவர் கடந்த 10 – 12 வருடங்களாக விளையாடி வருகிறார். அதே போல சாய் கிஷோர் கடந்த வருடம் விளையாடி அசத்தினார். எனவே ஒவ்வொரு வருடமும் புதிய வீரர்கள் அசத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்” என்று கூறினார்.

Advertisement