மும்பை அணிக்கு நெட் பவுலராக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம்வீரர் – விவரம் இதோ

Nagwaswalla

கடந்த சில நாட்களுக்கு முன் உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் 20 வீரர்கள் முன்னனி வீரர்களாகவும், நான்கு வீரர்கள் கூடுதல் வீரர்களாகவும் இடம் பிடித்திருந்தனர். நான்கு கூடுதல் வீரர்களில் ஒருவராக இடம்பிடித்த இடது கை வேகப் பந்து வீச்சாளரான அர்சான் நக்வஸ்வாலா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இந்திய அணியில் இடம் பிடித்தது குறித்து தற்போது பேட்டியளித்துள்ளார் அர்சான். அப்பேட்டியில் கூறியதவாது,

nagwaswalla 2

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பௌலரான ஜாஹீர் கான் தான் எப்போதுமே என்னுடைய ரோல் மாடல். அதற்கு முக்கியமான காரணம் அவரும் ஒரு இடது கை வேகப் பந்து வீச்சாளர் என்பதே ஆகும். அவர் இந்தியாவிற்காக மிக அற்புதமாக பந்து வீசியதைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியால் முன்னோட்டம் பார்ப்பதற்காக அர்சான் நக்வஸ்வாலா அழைக்கப்படிருந்தார்.

- Advertisement -

அப்போது பும்ரா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளரான ஷேன் பான்ட் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதைப் பற்றியும் கூறியிருக்கிறார் அர்சான் நக்வஸ்வாலா. அதைப் பற்றி அவர் கூறும்போது, நானும் பும்ராவும் முதல் தர கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடியது கிடையாது. ஏனெனில் நான் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடும்போது, பும்ரா இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸுடன் நான் நெட் பவுலராக பயிற்சி பெறும்போது பும்ராவுடன் இணைந்து பந்து வீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

nagwaswalla 3

அப்போது அவர் என்னிடம், மற்றவர்களிடமிருந்து உன்னால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள். அது ஜாகீர் கான் அல்லது ஷேன் பாண்ட் யாராக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டாயோ , அதிலிருந்து எதை நீ செயல்படுத்தபோகிறாய் என்பதை நீ தான் முடிவு செய்யப் போகிறாய் என்று தன்னிடம் கூறியதாக அர்சான் கூறியிருக்கிறார். மேலும் அவர், இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருக்கும் பரத் அருணிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறினார்.

- Advertisement -

nagwaswalla 1

23 வயதே ஆன அர்சான் நக்வஸ்வாலா இதுவரை 16 முதல் தர போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளும், 20 லிஸ்ட் A போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். கடந்த ரஞ்சி டிராபி தொடரில் 41 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், அந்த தொடரில் 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். அவருடைய சீரான செயல்பாட்டின் காரணமாகத்தான் தற்போது அவருக்கு இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement