கதை அப்படி போகுதா.. வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தில் கைவைக்கும் பிசிசிஐ.. ஐபிஎல் சேர்மேன் வெளியிட்ட அறிவிப்பு

Arun Dhumal 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த வருடமும் களமிறக்கும் 10 அணிகளில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முன்னதாக இந்த வருடத்திற்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்றது. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்த கேப்டன் பட் கமின்ஸ் 20.50 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.

- Advertisement -

சம்பளத்துக்கு வரம்பு:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நேரடி ஏளத்தில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டு அதிக தொகைக்கு விலை போன வீரராக வரலாறு படைத்தார். ஆனால் இந்தியாவின் நட்சத்திர ஜாம்பவான் வீரர்களாக தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 15 வருடங்களுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் விளையாடியும் ஒரு சீசனில் கூட முழுமையாக இப்படி 20 கோடியை சம்பளமாக பெற்றதில்லை.

ஆனால் கமின்ஸ், ஸ்டார்க் ஆகிய இருவருமே நாட்டுக்காக விளையாடு போதெல்லாம் ஐபிஎல் தொடரை குப்பையாக புறக்கணித்தனர். அப்படிப்பட்ட அவர்களுக்கு இப்படி திடீரென்று சிவப்பு கம்பளம் விரித்து தோனி, விராட் கோலியை மிஞ்சி கோடிகளை கொட்டிக் கொடுக்கலாமா? என்று ஐபிஎல் அணிகள் மீது இந்திய ரசிகர்களும் ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கான சம்பளத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான பரிசீலனை செய்ய உள்ளதாக ஐபிஎல் சேர்மேன் அருண் துமல் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மினி ஏலம் உருவாக்கும் ஊதிய முரண்பாடுகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். நிச்சயமாக நாங்கள் மறு ஆய்வு நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண புதிய கொள்கையை வெளியிடுவோம்”

இதையும் படிங்க: சிஎஸ்கே கேப்டன்ஷிப் கஷ்டமான வேலை.. ஆனா அந்த 3 பேர் இருக்கும் போது கவலையுமில்ல.. ருதுராஜ் பேட்டி

“அதற்காக சில யோசனைகள் வந்துள்ளன. அதை இறுதிப்படுத்துவதற்கு முன்பாக அணி நிர்வாகங்களுடன் நாங்கள் விவாதிக்க உள்ளோம்” என்று கூறினார். இதனால் வருங்காலங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கான ஐபிஎல் சம்பளத்தில் பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் மெகா ஏலத்தில் 3 – 4 பழைய வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு மீண்டும் அனுமதி கொடுக்க உள்ளதாகவும் அருண் துமால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement