இந்தியாவில் தான் கிரிக்கெட் விளையாட பயம் அதிகம். பாக் நிர்வாகியின் கிண்டல் பேச்சுக்கு பதிலடி கொடுத்த – பி.சி.சி.ஐ

Eshan-PCB

கிரிக்கெட் விளையாடும் நாடுகளிடையே பாகிஸ்தான் அணி பாதுகாப்பற்ற நாடாக பல நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களாளும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சில வீரர்கள் காயமடைந்தனர்.

Pak-1

இந்த நிகழ்வு நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்பு காரணம் கருதி எந்த ஒரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்ப கிடையாது. பொதுவான இடமான துபாய் போன்ற யுஏஇ நாடுகளுக்கு சென்று கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தது.

இந்நிலையில் தற்போது இலங்கை அணி பாகிஸ்தான் சென்று டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் பாகிஸ்தானில் விளையாடியது. இந்த தொடரில் இலங்கை வீரர்கள் அந்நாட்டு பிரதமருக்கு இணையான பாதுகாப்புடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர். இதனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு கனவு கண்டது.

Ehsan

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான டெஸ்ட் தொடர் வங்கதேச அணியுடன் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால் இந்த தொடரை வங்கதேச அணி பாதுகாப்பு காரணமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் ஏன் கிரிக்கெட் விளையாட முடிவதில்லை என்று நினைக்கிறீர்கள். பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ஹேசன் மணி தெரிவித்தார்.

- Advertisement -

Dhumal

அவரின் இந்த கருத்துக்கு தற்போது பி.சி.சி.ஐ -யின் பொருளாளர் அருண் துமால் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : லண்டனில் அதிகம் வசிக்கும் ஒரு நபர் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து எவ்வாறு பேசுவது ? அவருக்கு இந்தியா குறித்து பேசுவதற்கு தகுதியே கிடையாது. அவர் பாகிஸ்தானில் அதிக நேரம் தங்கி இருந்தால் அங்குள்ள நிலைமை அவருக்கு தெரிந்திருக்கும். முதலில் பாகிஸ்தான் செல்லுங்கள் என்பதுபோல தனது கருத்துக்களை தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார் அருண் துமால்.