- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது உண்மையில்ல.. இந்திய அணியில் என்னை ஓரங்கட்ட தப்பான செய்தி பரப்பீட்டாங்க.. வருண் சக்ரவர்த்தி வருத்தம்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் தினேஷ் கார்த்திக் உதவியுடன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2020 சீசனில் அசத்திய அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி 3 போட்டிகளில் விளையாடினார். மறுபுறம் அந்த சமயத்தில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்கள் சுமாரான ஃபார்மில் தடுமாறினார்கள்.

அதன் காரணமாக துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் அவர்களை கழற்றி விட்ட தேர்வுக் குழு வருண் சக்கரவர்த்தியை ஆச்சரியப்படும் வகையில் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஓப்பனிங் போட்டி உட்பட மொத்தம் விளையாடிய 3 போட்டிகளிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறினார்.

- Advertisement -

ஓரம் கட்டிட்டாங்க:
அதன் பின் லேசான காயத்தை சந்தித்த அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் பெரிய விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் இந்திய அணியில் மறு வாய்ப்பு பெறாமல் கழற்றி விடப்பட்டு வருகிறார். இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் லேசான காயத்தை சந்தித்த தம்மை பெரிய காயம் சந்தித்ததாக தவறான செய்திகளை பரப்பி இந்திய அணியிலிருந்து சிலர் ஓரங்கட்டி விட்டதாக வருண் சக்கரவர்த்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் கடினமாகும். ஏனெனில் உலகக் கோப்பை முடிந்ததும் எனக்கு சிறிய காயம் தான் ஏற்பட்டது. பெரிய காயம் ஏற்படவில்லை. அந்த காயத்திலிருந்து நான் வெறும் இரண்டு மூன்று வாரங்களில் மீண்டும் விளையாட வந்து விட்டேன். ஆனால் அதன் பின் நான் ஓரம் கட்டப்பட்டேன். இருப்பினும் தொடர்ந்து காயமடைந்ததாலேயே எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சிலர் சொல்லி வருகின்றனர்”

- Advertisement -

“உண்மையாகவே நான் நீண்ட நாட்களாக பெரிய காயத்தை சந்திக்கவில்லை. அது வதந்தியா அல்லது என்னை ஓரங்கட்ட சிலர் பரப்பிய செய்தியா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இது தான் வாழ்க்கை. அது நியாயமற்றது. அது என் மீது மிகவும் கடினமாக வந்தது. 2022 ஐபிஎல் தொடர் எனக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணியில் விளையாடுவதற்காக அதிகமாக போராடினேன்”

இதையும் படிங்க: சொந்த ஊரில் நாளை நடைபெறவுள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா ஆடுவாரா? – ஒரு கண்டிஷன் இருக்காம்

“அதனால் என்னுடைய திறமையை அனைவருக்கும் காண்பிக்க விரும்பினேன். அதன் காரணமாக என்னுடைய பந்து வீச்சில் நான் நிறைய மாற்றங்களையும் செய்தேன். அது என்னுடைய மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் என்னுடைய சாதாரணமான பவுலிங்கை கூட என்னால் வீச முடியவில்லை. அதனால் அந்த ஐபிஎல் எனக்கு மோசமாக அமைந்தது” என்று கூறினார்.

- Advertisement -