IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிராக எந்த நிற ஜெர்ஸியை அணிய போகிறோம் என்று தெரியாது – பீல்டிங் பயிற்சியாளர்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Arun
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இங்கிலாந்து போட்டிக்கான இந்திய அணியின் ஜெர்ஸி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான அருண் பாரத் அளித்த பேட்டியில் கூறியதாவது : இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் எந்த ஜெர்ஸியை அணியப்போகிறோம் என்பது உண்மையில் எங்களுக்கு தெரியாது. அடுத்து நடக்கப் போகும் போட்டி குறித்து தான் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

india

மேலும், போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். அதனால் அடுத்த போட்டியில் என்ன நிறம் அணிந்து விளையாட போகிறோம் என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அதனால் அதுகுறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. மேலும், எங்களுக்கு எப்போதும் நீலநிறம் மட்டுமே எப்போதும் ராசியான ஒன்று என்று அருண் பாரத் கூறினார்.

Advertisement