பும்ராவை பாத்து தான் நான் அந்த திறமையை கத்துகிட்டேன் – அர்ஷ்தீப் சிங் வெளிப்படை

Arshdeep Singh
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி 65 டி20 போட்டிகள் விளையாடி 101 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்திய டி20 அணியை பொறுத்தவரை முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

பும்ராவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் : அர்ஷ்தீப் சிங்

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விரைவில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அர்ஷ்தீப் சிங் சமீப காலமாகவே யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீசி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தான் யார்க்கர் பந்துகளை நன்றாக வீச காரணமே ஜஸ்ப்ரீத் பும்ராவை பார்த்து கற்றுக்கொண்டது தான் என்று சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : யார்க்கர் பந்துகளை வீச ஒரு வெண்டிங் மெஷின் உண்டு என்றால் அதில் அதிகபட்ச லெவலில் சிறப்பாக வீசக்கூடியவர் ஜஸ்ப்ரீத் பும்ரா தான்.

பும்ராவை போன்று துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசுவது கடினம். அதே வேளையில் அவருக்கு அடுத்து சரியான இடத்தில் யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீசுபவராக நான் இருக்கிறேன். பும்ராவை பார்த்து தான் நான் யார்க்கர் பந்துகளை வீச கற்றுக் கொண்டேன்.

- Advertisement -

அதுமட்டுமின்றி யூடியூப்-இல் நான் ஏகப்பட்ட இடது கை பந்துவீச்சாளர்களின் வீடியோக்களை பார்த்திருக்கிறேன். குறிப்பாக வாசிம் அக்ரம், ஜாஹீர் கான் ஆகியோர் தான் என்னுடைய முன்மாதிரிகள். அவர்கள் இருவரும் பந்துவீசும் வீடியோக்களை பார்த்து அதிலிருந்தும் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

இதையும் படிங்க : பும்ரா விடயத்தில் பாத்து கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்.. அதான் நல்லது – அபிஷேக் நாயர் கருத்து

இனியும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு என்னுடைய திறமையை இன்னும் அதிகரித்துக்கொண்டு இந்திய அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் வழங்க தயாராக இருக்கிறேன் என்றும் அர்ஷ்தீப் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement