- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சேன்ஸ் கிடைக்கலனாலும் இங்கிலாந்தில் நிறைய கத்துக்கிட்டேன்.. அதுவே போதும் – அர்ஷ்தீப் சிங் பேட்டி

அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து சென்றிருந்த இந்த இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு அங்கு சமாளிக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

இங்கிலாந்து மண்ணில் நிறைய கத்துக்கிட்டேன் : அர்ஷ்தீப் சிங்

ஆனால் இந்த தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கிய இந்திய அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக இந்து தொடரை சமன் செய்தது பாராட்டுக்களை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக 26 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் நிச்சயம் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெற்று முடிந்த இந்த தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேவேளையில் அன்சுல் கம்போஜ்ஜிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து தற்போது சில கருத்துக்களை அர்ஷ்தீப் சிங் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த இரண்டு மாதங்களாகவே நான் இந்திய டெஸ்ட் அணியுடன் பயணித்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

- Advertisement -

இந்த இங்கிலாந்து தொடரில் எனக்கு டெஸ்ட் அணியில் அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் அணியுடன் இணைந்து நிறைய பயிற்சிகளை செய்து என்னுடைய திறமைகளையும், திறன்களையும் வளர்த்துக் கொண்டேன். அதோடு டெஸ்ட் போட்டிகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும்? போட்டியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த பல்வேறு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டேன்.

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

அதோடு கடந்த 2 மாதம் இந்திய அணியுடன் பயணிக்கையில் இனிவரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் அறிந்து கொண்டேன். ஓவல் டெஸ்ட் போட்டியின் போது நான் சிகப்பு பந்தில் பந்துவீச பயிற்சியை துவங்கினேன். நிச்சயம் எனக்கான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் அசத்துவேன் என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -