இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று டிசம்பர் 11-ஆம் தேதி முள்ளான்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன் காரணமாக முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி :
2 ஆவது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் :
20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் என்கிற மாபெரும் ரன் குவிப்பை வழங்கியது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரரான குவிண்டன் டி காக் 90 ரன்களையும், அதிரடி ஆல்ரவுண்டரான டோனவன் பெரேரா 30 ரன்களையும் குவித்து அசத்தினர். அவர்களது அதிரடி அந்த அணியை 200 ரன்களை கடக்க உதவியது.
பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்து வீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு மோசமான சாதனைக்கு ஆளாகினார்.
அந்தவகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது ஏகப்பட்ட உதிரிகளை வழங்கிய அவர் 9 ஒயிடுகளை வழங்கி நீண்ட ஓவரினை வீசியதோடு மட்டுமின்றி டி20 போட்டிகளில் தனது இரண்டாவது மோசமான பந்துவீச்சையும் இன்று வெளிப்படுத்தியிருந்தார்.
அதாவது ஏற்கனவே டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அவர் இதே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த 2022-ஆம் ஆண்டு கவுகாத்தி நகரில் நடைபெற்ற போட்டியில் 62 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதுவே டி20 போட்டிகளில் அவரது மோசமான பந்துவீச்சாக இருந்தது.
இதையும் படிங்க : அடுத்தடுத்த கேப்டன் பதவி மட்டுமல்ல.. சம்பள விடயத்திலும் சுப்மன் கில்லுக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – விவரம் இதோ
இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் விட்டுக்கொடுத்த 54 ரன்கள் மூலம் டி20 போட்டிகளில் தனது இரண்டாவது மோசமான பந்துவீச்சு ஸ்பெல்லை அவர் இன்று பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தனது சொந்த மைதானத்தில் அவரது இந்த மோசமான பந்துவீச்சு ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.



