- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பெஞ்சில் இருந்த நான்.. இந்தியாவை ஜெய்க்க வைத்து ஆட்டநாயகனாக அவர் தான் காரணம்.. அர்ஷ்தீப் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் இந்தியா தோற்றது. 3வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது. ஹோபார்ட் மைதானத்தில் நவம்பர் இரண்டாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 186/6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டிம் டேவிட் 74, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 64 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்தியா அணிக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா அதிரடியாக பேட்டிங் செய்து 18.3 ஓவரில் 188/5 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆட்டநாயகன் அர்ஷ்தீப்:

அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 49*, திலக் வர்மா 29, கேப்டன் சூரியகுமார் 24, அபிஷேக் சர்மா 25 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்தியாவின் இந்த வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

2024 டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்தியாவுக்காக 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராகவும் சாதனை படைத்தார். இருப்பினும் ஹர்சித் ராணாவுக்காக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் பெஞ்சில் அமர வைத்து வருகிறார். அதற்காக கவலைப்படாத அர்ஷ்தீப் கிடைத்த வாய்ப்பில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

- Advertisement -

பும்ராவின் உதவி:

அதற்கு தம்முடைய எளிதான திட்டங்களை பின்பற்றுவதும் ஜஸ்ப்ரித் பும்ரா எதிர்ப்புறம் அழுத்தத்தை உண்டாக்குவதும் முக்கிய காரணம் என்று அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் என்னுடைய வேலையை செய்து, திறன் மேலே நம்பிக்கை வைத்து, பயிற்சி எடுத்த திட்டங்களை செயல்படுத்துகிறேன். அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது பங்காற்றுவதற்காக சிறப்பாக உணர்கிறேன்”

இதையும் படிங்க: கடைசில இந்த மாற்றம் நிகழ்ந்து வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி.. வெற்றிக்கு பிறகு – சூரியகுமார் யாதவ் ஹேப்பி

“எதிரணி பேட்ஸ்மேன்கள் உங்களை அடித்து நொறுக்க வரும் போது கண்டிப்பாக விக்கெட்டுகள் எடுப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். அத்துடன் மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா போன்றவர் பவுலிங் செய்தால் பேட்ஸ்மேன்கள் எனக்கு எதிராக அடிக்கடி ரிஸ்க் எடுப்பார்கள். அது எனக்கு விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது. களத்தில் மகிழ்ச்சியுடன் என்னுடைய திட்டங்களை எளிதாகப் பின்பற்றி விளையாட முயற்சிக்கிறேன். பவர்பிளே, டெத் உட்பட சூழ்நிலை எதிராக இருந்தாலும் நான் பயிற்சி எடுத்த திட்டங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -